Enable Javscript for better performance
ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், நடமாடும் சிகிச்சைப் பிரிவு ஊர்தி ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாவது:
    திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் கிராமங்களுக்குச் சென்று, அங்கு உள்ள மனவளர்ச்சி குன்றிய, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தசைப் பயிற்சி, உதவி உபகரணங்கள் வழங்குதல், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்தும் நடமாடும் சிகிச்சைப் பிரிவு ஊர்திக்கு ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    விண்ணப்பிக்க விரும்புவோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் 18 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வியில் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் வரும் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai