Enable Javscript for better performance
காங்கயம் அருகே சிறுவன் மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம் அருகே தோட்டத்து குடிசை வீட்டில் படுத்திருந்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கயத்தை அடுத்துள்ள இல்லியம்புதூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது உறவினர் மகன் வசந்தகுமார் (14). பெற்றோர் பிரிந்திருப்பதால் மூர்த்தி வீட்டில் வசந்தகுமார் தங்கியிருந்தார்.
     இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, தோட்டத்து குடிசை வீட்டுக்குள் படுத்திருந்த வசந்தகுமார் நீண்ட நேரமாக வெளியே வராததால், உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மயங்கி நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார்.
    உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்தகுமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்ககெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனராம்.
    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காங்கயம் போலீஸார், வசந்தகுமாரை விஷ ஜந்து தீண்டியதா அல்லது மின்னல் தாக்கி இறந்தாரா என்பது
    குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai