Enable Javscript for better performance
சிறைக் காவலர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி கிளைச் சிறையில் இருந்து கைதி தப்பியோடியதையடுத்து, அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் பணி யிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய புதுச்சந்தையைச் சேர்ந்த கருப்பசாமி மகன் புக்கன் (எ) மூர்த்தி (31) அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
    இந்நிலையில், அவர் சிறையில் இருந்து வியாழக்கிழமை தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, கைதி தப்பியோடியபோது, பணியில் இருந்த தலைமைக் காவலர் ஹரிதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai