Enable Javscript for better performance
நீரேற்று நிலைய மின் மோட்டார் பழுது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கொடுமுடி நீரேற்று நிலைய மின் மோட்டார் பழுதடைந்துள்ளதால் வெள்ளக்கோவில் பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
     கொடுமுடி, காவிரி ஆற்றிலிருந்து வெள்ளக்கோவில் நகராட்சி, காங்கயம் நகராட்சி, முத்தூர் பேரூராட்சி, மூலனூர் பேரூராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
     இந்நிலையில், தலைமை நீரேற்று நிலையத்தில் ராட்சத மின் மோட்டார் பழுதடைந்ததால், கடந்த இரண்டு தினங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
    இரண்டு மாற்று மின் மோட்டார்களும் தயார் நிலையில் வைக்கப்படவில்லை.
      இது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்ததின்பேரில், பொதுப் பணித் துறை பொறியாளர்கள் மின் மோட்டார்களை செப்பனிடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    இப்பணி முடிவடையும் வரை, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai