Enable Javscript for better performance
பலத்த மழை: விதைப்புப் பணியில் விவசாயிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம் பகுதியில் வியாழக்கிழமை பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை விவசாயிகள் விதைப்பு பணிகளில் தீவிரமாக உள்ளனர்.
      காங்கயம் பகுயில் ஊதியூர், வட்டமலை, ஆரத்தொழுவு, கரியாக்கவுண்டன்புதூர், காடையூர், சிவன்மலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் தானியப் பயிர்கள் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். சோளம், நரிப்பயறு, தட்டைப் பயறு, பாசிப் பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து வருகின்றனர். வடகிழக்குப் பருவ
    மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்தப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
     காங்கயம் கடை வீதிகளில் உள்ள தானிய மண்டிகளில் தானியங்களை வாங்க அதிகமான விவசாயிகள் வருவதால், வியாபாரம் களைகட்டியுள்ளது. தானியங்கள் விலையும் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வெள்ளைச் சோளம் கிலோ ரூ. 55, கொள்ளு ரூ. 35, நரிப்பயறு கிலோ ரூ. 100, பாசிப் பயறு கிலோ ரூ. 80, தட்டைப்பயறு ரூ.80, உளுந்து ரூ.55 என விற்பனை செய்யப்படுகிறது.
     காங்கயம் நகரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தானிய மண்டிகள் உள்ளன. இதில்,  வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 500 மூட்டைகளுக்கும் கூடுதலாக விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    வரும் நாள்களில் இன்னும் அதிக அளவில் தானியங்கள் விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai