Enable Javscript for better performance
பல்லடம் பகுதியில் கழிவுப் பஞ்சு விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் பகுதியில் கழிவுப் பஞ்சு விலை திடீரென்று உயர்ந்துள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
    திருப்பூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் கால்நடை பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சோளத்தட்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெரும்பாலான விவசாயிகள் நூல் மில்களில் வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.
    தற்போது கழிவு பஞ்சுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கழிவுப் பஞ்சை முன்பதிவு செய்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கழிவு பஞ்சு விலை உயர்ந்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    இதுகுறித்து கேத்தனூர் கழிவுப் பஞ்சு வியாபாரி நாராயணசாமி கூறியதாவது:
    தீவனங்கள் விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் கழிவுப் பஞ்சை வாங்கி கறவை மாடுகளுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் உள்ள நூற்பாலைகளில் இருந்துதான் கழிவு பஞ்சை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகிறோம். தற்போது அங்குள்ள நூற்பாலைகள் சரிவர இயங்குவதில்லை இதனால் கழிவு பஞ்சு கிடைப்பதில்லை. காவிரி பிரச்னையால் கர்நாடகத்திலிருந்தும் கழிவுப் பஞ்சை தமிழகத்திற்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் தமிழகத்தில் கழிவுப் பஞ்சுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ. 13-க்கு விற்ற பஞ்சு  தற்போது ரூ. 16 வரை விலை போகிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai