Enable Javscript for better performance
பூட்டிக் கிடக்கும் கழிப்பிடத்தை திறக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

     தாராபுரம் நகரில் கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து தாராபுரம் நகராட்சி 2-ஆவது வார்டு பொதுமக்கள், ஆணையாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: தாராபுரம் நகராட்சி 2-ஆவது வார்டு நாடார் தெரு வடக்குப் பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்த பழைய கழிப்பிடம் பழுதடைந்துள்ளது.
    புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு பொதுக் கழிப்பிடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai