Enable Javscript for better performance
பெண்களைக் கிண்டல் செய்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தாராபுரத்தில் பெண்களைக் கிண்டல் செய்ததாக ஒருவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    தாராபுரம் அருகே கரையூரைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் பெண்களை வேலைக்கு அழைத்து வரும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
    இவர் பணியாளர்களை வெள்ளிக்கிழமை காலை அழைத்துக்கொண்டு நூற்பாலைக்கு அருகே வந்தபோது, பொள்ளாச்சி சாலையைச் சேர்ந்த இளையராஜா (38) என்பவர் நூற்பாலை பெண் பணியாளர்களைக் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
    இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில்  தாராபுரம் காவல் துறையினர்  வழக்குப் பதிந்து இளையராஜாவைக் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai