Enable Javscript for better performance
ரயில் மறியல்: திமுக பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் கூறியுள்ளது:
    காவிரி நதிநீர் விவகாரத்துக்குத் தீர்வு காண மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
    இதில் அக்டோபர் 17-ஆம் தேதி திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பங்கேற்கிறது. இதில், திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட கட்சியினரும், விவசாயிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai