Enable Javscript for better performance
20-ஆம் தேதிக்குள் போனஸ் அளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வரும் 20-ஆம் தேதிக்குள் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தியாகி குமரன் பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    தமிழ்நாடு தியாகி குமரன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் போனஸ் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் என்.டி.ராஜசேகர் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஆர்.கமலா வரவேற்றார். சங்க மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநிலம் முழுவதும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்து, கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ், கால தாமதம் இல்லாமல் வரும் 20-ஆம் தேதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
    பண்டிகை நாள்களில் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும். பேருந்துக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்துகளில் இருக்கை எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை அதிக அளவில் ஏற்றிச் செல்லக்கூடாது. பேருந்துகளில் பணி செய்யும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அதிக பணிப்பளு அளிக்க கூடாது. இதனால் விபத்துகளைக் குறைக்க முடியும்.
    அரசு அறிவித்துள்ள இலவச அடுக்குமாடி குடியிருப்பு கோரி திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப மனு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு காரணமாக அந்த விண்ணப்ப மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai