எலுமிச்சையில் சொறி நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 20th September 2016 09:15 AM | Last Updated : 20th September 2016 02:34 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் பகுதியில் எலுமிச்சை பழங்களில் சொறி நோயின் தாக்குதல் அதிக அளவு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவில் பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இம்மரங்களின் இலைகள், பழங்களில் புள்ளிகள் தோன்றுகின்றன. இந்தப் பாதிப்பு காரணமாக எலுமிச்சையின் விளைச்சல் குறைந்துள்ளதுடன், பழங்களை விற்கவும் முடிவதில்லை.
இதுகுறித்து வேளாண் அலுவலர் முருகேசன் கூறுகையில், "இந்தச் சொறி நோய் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் காய்ந்த இலைகள், குச்சிகளைத் தீயிட்டு அழிக்க வேண்டும். காப்பர் ஆக்ஸி குளோரைடு, சூடோமோனாஸ் புளூரசன்ஸ், வேப்பம் புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றைத் தெளித்தால் இந்நோய் கட்டுப்படும்' என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...