திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் காட்சிகள் அடங்கிய விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரிடமும், உள்நோயாளிகளிடமும் மருத்துவமனை ஊழியர்கள் பணம் பெறும் காட்சிகள் அடங்கிய விடியோ பதிவு, கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக இரு தினங்களுக்கு முன் பரவியது. இந்நிலையில், சிகிச்சைக்கு வந்தவர்களிடம் பணம் பெற்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.