உடுமலை வியாபாரிகள் சங்கம், ஆடிட்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
உடுமலையில் எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு பாலநாகமாணிக்கம் தலைமை வகித்தார். கோவை டேக்ஸ் கன்சல்டண்ட் சொசைட்டி நிர்வாகிகள் கே.ஜெயகுமார், எம்.ஆனந்தராஜ் ஆகியோர் ஜிஎஸ்டி வரிகள் குறித்து விளக்கினர். இதில், ஜிஎஸ்டி வரி விதிப்புகள் குறித்த வர்த்தகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது. சிறு, குறு வர்த்தகர்கள் சுமார் 250 பேர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.