பெருமாநல்லூர் அருகே மின்கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் புதன்கிழமை உயிரிழந்தது.
பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குப் பின்புறமாக 5 வயது ஆண் மயில் பறந்தபோது மின்கம்பியில் உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்து அது உயிரிழந்தது.
இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், மயிலின் உடலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அங்கேயே மயில் புதைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.