திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மே 27-ஆம் தேதி தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் நோயலின் ஜான் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மே 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். எனவே, அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.