திருப்பூர், பிச்சம்பாளையம்புதூரில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சியின் 29, 30-ஆவது வார்டுக்கு உள்பட்ட கங்கா நகர், பூம்பாறை, ராஜா நகர், லட்சுமி நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதிக்கு அருகிலேயே அரசுப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிச்சம்பாளையம்புதூர், நல்லாற்று பகுதியில் மதுக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் பரவியது.
இதைக் கண்டித்து, பிச்சம்பாளையம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொறுப்பாளர் மயில்சாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ரவி, சசிகுமார், மகேந்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் நடராஜ், சின்னசாமி, பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகி கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.