உடுமலை, அமராவதி வனங்களில் வன விலங்கு கணக்கெடுப்புப் பணி: இன்று தொடங்குகிறது

உடுமலை, அமராவதி ஆகிய வனச் சரகங்களில் வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (மே 25) தொடங்க உள்ளது.
Updated on
1 min read

உடுமலை, அமராவதி ஆகிய வனச் சரகங்களில் வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (மே 25) தொடங்க உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த இரு வனச் சரங்களில் மே 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக, உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவுக்குத் தலா வன ஊழியர், வேட்டைத் தடுப்புக் காவலர், தன்னார்வலர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஒரு நாளைக்கு 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இப்பணிகள் நடைபெற உள்ளன. வன விலங்குகளின் கால் தடம், நகங்கள் பதிவு, எச்சம் ஆகியவற்றை வைத்து இந்தக் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக, கணக்கெடுப்பாளர்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் அ.பெரியசாமி, உடுமலை வனச் சரகர் மாரியப்பன்,அமராவதி வனச் சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com