திருமுருகன்பூண்டியில் குடிநீர் கேட்டு போராட்டம்

திருமுருகன்பூண்டி 3ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப் பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்துக்குள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

திருமுருகன்பூண்டி 3ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப் பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்துக்குள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமுருகன்பூண்டி 3 வது வார்டு அணைப்புதூர், ஒர்க் ஷாப் வீதி, வயக்காடு,  பிரதான வீதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப் பகுதியில் ஆற்றுக் குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீர் 40 நாள்கள் ஆகியும் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இந்நிலையில், அவிநாசி பிரதான சாலையில் சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
 இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.  இதனால், அப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   
தகவலறிந்து வந்த செயல்அலுவலர், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், வியாழக்கிழமை மாலைக்குள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்துஅனைவரும்  கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com