சங்கர் கொலை வழக்கு: அரசுத் தரப்பு வாதம் நிறைவு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் புதன்கிழமை நிறைவுபெற்றது.
Published on
Updated on
1 min read

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் புதன்கிழமை நிறைவுபெற்றது.
திருப்பூர் மாவட்டம்,  உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழனியைச் சேர்ந்த கௌசல்யாவை காதலித்து திருமணம் செய்தார். இதனால், சங்கர் 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கர நாராயணன் தலைமையில்,  வழக்குரைஞர்கள் ரூபன், செந்தில்குமார் உள்ளிட்ட நால்வர் குழுவினர் ஆஜராகி வாதிட்டனர்.
தொடர்ந்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. புதன்கிழமையுடன் அரசுத் தரப்பு வாதம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை எதிர்த்தரப்பு வாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com