வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில் கொசுப் புழு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளக்கோவில் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால், ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவற்றிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.
நகராட்சி ஆணையர் இ.ஷாஜகான் உத்தரவுப்படி, வார்டு வாரியாக கொசு ஒழிப்புப் பணிக்கு தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு,வீடாகச் சென்று தண்ணீர்த் தொட்டிகளில் திரவ மருந்து ஊற்றி வருகின்றனர். இதுதவிர புகை மருந்தும் அடிக்கப்படுகிறது.
மேலும், ஆரம்ப கட்டத்திலேயே கொசுப் புழு ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.