Enable Javscript for better performance
"சுகாதாரப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "சுகாதாரப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்'

    By DIN  |   Published on : 22nd October 2017 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் சுகாதாரப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.
      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது தெற்கு ஒன்றிய மாநாடு திருப்பூர், காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு  ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
        இதில், கட்சியின் மூத்த உறுப்பினர் என்.தங்கமுத்து கொடியேற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சி.சுப்பிரமணியம் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினார்.  இதில்,  திருப்பூர் மாநகரில் சொத்து வரியைக் கடுமையாக உயர்த்தியுள்ள நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.  டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகளை அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai