Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: சிறப்புப் பார்வையாளர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: சிறப்புப் பார்வையாளர் தகவல்

    By DIN  |   Published on : 22nd October 2017 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று  வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளரான சமூகப் பாதுகாப்பு ஆணையர் ஆர். லால்வேனா தெரிவித்தார்.
      அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
       இதில், தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளரான சமூகப் பாதுகாப்பு ஆணையர் ஆர். லால்வேனா தலைமை வகித்து,  அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சி பிரமுகர்களின்  கருத்துகளைக் கேட்டறிந்தார்.
         அதன் பின்னர் அவர் பேசியதாவது:   வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிறகு வெளியிடப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் ஜனவரி முதல் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் கடந்த 3-ஆம் தேதி  வெளியிடப்பட்டது.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குரிய வரைவு  வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சியரால்  வெளியிடப்பட்டு,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அதன் நகல்கள்,  குறுந்தகடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
      வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்துத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான மாநகராட்சி அலுவலகம்,  கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளின் கிராம சபைக் கூட்டத்திலும்,  இதரப் பகுதிகளில் குடியிருப்போர் நல சங்கக் கூட்டம் நடத்தப்பட்டும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.  பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொண்டு பெயர்களை சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய மனுக்கள் அளிக்கலாம், என்றார்.
     மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி, சார் ஆட்சியர்கள், கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai