வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 7 நாள் ராமாயணத் தொடர் சொற்பொழிவு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
முத்துமங்களம் மங்கள விநாயகர் கோயிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை முத்தூர் தர்ம ரட்சண சமிதி தலைவர் ஏ.பி.வேலுசாமி தொடக்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளர் சமிதி நிர்வாகி ராஜா முத்தையா ராமாயண சொற்பொழிவைத் தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்ம ரட்சண சமிதி நிர்வாகிகள் செய்துள்ளனர்.