Enable Javscript for better performance
ஏ.இ.பி.சி. துணைத் தலைவராக ஏ.சக்திவேல் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணைத் தலைவராக ஏ.சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் கிளைகளுடன் ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவத் தலைவர் ஏ.சக்திவேல் போட்டியிட்டார். 
    இந்நிலையில், ஏ.இ.பி.சி. செயற்குழுக் கூட்டம் தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில், 2018-19ஆம் ஆண்டுக்கான துணைத் தலைவராக ஏ.சக்திவேல் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 2020-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு  தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
    ஏற்கெனவே 1998,  2004,  2012 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை இவர் ஏ.இ.பி.சி., தலைவராக இருந்துள்ளார். 
    தற்போது,  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவத் தலைவர்,  இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென்பிராந்தியத் தலைவர், இந்திய அமெரிக்க வர்த்தகக் கழகத்தின் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வரும் இவர் ஒரு கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் பணி செய்யும் ஆயத்த ஆடைகள், செயற்கை ஆடைகள், கைத்தறித் தொழில் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai