Enable Javscript for better performance
காவலர் குடியிருப்பில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயுக் கசிவு ஏற்பட்டு வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 
      திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் ராஜசேகர் (35). இவரது மனைவி அன்புச்செல்வி (32). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். நீதிமன்ற வீதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
       இந்நிலையில், அன்புச்செல்வி தனது ஆண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வியாழக்கிழமை  அடுப்பில் பால் கொதிக்கவைத்துள்ளார். அப்போது, அந்தக் குழந்தை எரிவாயு உருளை இணைப்பை இழுத்ததால் எரிவாயுக் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக்கொண்டது. உடனே, அன்புச்செல்வி குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே 
    ஓடிவந்துள்ளார். அதற்குள் அடுப்பில் வைத்திருந்த பால் குக்கர் வெடித்தது. எரிவாயு உருளை வெடித்துவிட்டதாகத் தகவல் பரவியதால் குடியிருப்புகளில் உள்ளவர்கள் உடனே வெளியேறி,  திறந்தவெளிப் பகுதிக்கு வந்துவிட்டனர்.
      தகலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai