Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
       கேரள மாநிலம்,  பாலக்காடு மாவட்டம்,  ஆலம்புழை தொக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ஷிஜு (37). இவர், தைப்பூச விழாவுக்காக  பாதயாத்திரையாக பழனிக்கு வந்தார். பின்னர்,  அங்கிருந்து பல்வேறு ஊர்களில் உள்ள முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாகவே சென்று வழிபட்டு வந்தவர்.
      இந்நிலையில்,  பல்லடம் அருகே உள்ள அலகுமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் அவிநாசிபாளையத்தில்,  நாச்சிபாளையம் பிரிவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றை ஷிஜு எட்டிப்பார்த்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.   
       இது குறித்து தகவல் கிடைத்ததும்  பல்லடம் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று  உயிருடன் மீட்டனர். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai