Enable Javscript for better performance
கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலில் கிணறுக்குள் இருந்து மூதாட்டி சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
    இலுப்பைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் டெம்போ உரிமையாளர் ரவி. இவர், வெள்ளக்கோவில் நடேசன் நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய தாயார் சாமியாத்தாள் (65) பக்கத்திலுள்ள மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு ரவி தினமும் உணவு கொடுத்து கவனித்து வந்தாராம். வழக்கம்போல், ரவி வியாழக்கிழமை காலை தனது தாயார் வீட்டுக்குச் சென்றுபார்த்தபோது அவரைக் காணவில்லை. அக்கம்பக்கம் தேடியுள்ளனர்.
    இந்நிலையில்,  அருகிலுள்ள நகராட்சி பொதுக் கிணறு அருகில் செருப்பும், கிணற்றுக்குள் கைத்தடியும் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து,  வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுசாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று 
    கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியைத் தேடினர். ஈரோடு மாவட்டம், அறச்சலூரைச் சேர்ந்த 4 பேர் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் மூதாட்டியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டது.
    இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  கிணற்றுக்குள் எப்படி மூதாட்டி விழுந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai