Enable Javscript for better performance
குரூப் 4 தேர்வு: 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்- Dinamani

சுடச்சுட

    

    குரூப் 4 தேர்வு: 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்

    By DIN  |   Published on : 09th February 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4-இல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 43,794 பேர் பங்கேற்க உள்ளனர்.
     இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
    தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மூலம்  குரூப் 4-இல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 11-ஆம் தேதி முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்காக,  மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு,  திருப்பூர் தெற்கு , அவிநாசி, பல்லடம், காங்கயம், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய வட்டங்களில் 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 140 தேர்வு அறைகளில்  43,794 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இதற்காக 140 தேர்வு மைய மேற்பார்வையாளர்களும், 13 பறக்கும் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்வு மையங்களைக் கண்காணிக்கும் வகையில் 102 விடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai