Enable Javscript for better performance
சிறு, குறு நிறுவனங்கள் கடன் தவணையை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம்: தொழில் பாதுகாப்புக் குழு வரவே- Dinamani

சுடச்சுட

    

    சிறு, குறு நிறுவனங்கள் கடன் தவணையை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம்: தொழில் பாதுகாப்புக் குழு வரவேற்பு

    By DIN  |   Published on : 09th February 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணையை திருப்பிச் செலுத்த 180 நாள்கள் அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு வரவேற்றுள்ளது.
    இது குறித்து திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.அண்ணாதுரை கூறியதாவது:
    சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்துவதில் 90 நாள்களுக்குமேல் தாமதம் ஏற்பட்டால் அந்தக் கடனை, செயல்படாத சொத்துகளாக (NO​N-​P​E​R​F​O​R​M​I​NG AS​S​E​TS) வங்கிகளால் வகைப்படுத்தப்படுகின்றன.
    இதனால், கடன் வாங்கிய நிறுவனங்களின் கடன் தரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் பெற்றுவந்த பிற கடன் வசதிகளும் நிறுத்தப்படுகிறது. மேலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலாக்கப்பட்டதன் விளைவாக, சிறு தொழில் நிறுவனங்கள் தாங்கள் விற்ற சரக்கிற்கு வரவேண்டிய தொகைகளைப் பெறுவதில் மிகுந்த சிரமமும், ஜி.எஸ்.டி.யால் கூடுதல் செலவினங்களும் ஏற்பட்டது.
    வங்கிக் கடன் தவணைகளை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. இதனால் அவர்களது கடன் கணக்குகளை என்.பி.ஏ. ஆக வங்கிகள் வகைப்படுத்தின. அதைத் தொடர்ந்து குறு,  மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நலிவடைந்து மூடப்பட்டன.
    இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணும் பொருட்டு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை சந்தித்து கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. பதிவு பெற்றுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு 180 நாள்கள் அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இது சிறு தொழில் நிறுவனங்கள் தங்களை சற்று நிலைப்படுத்திக் கொள்ள உதவும். இந்த அறிவிப்பை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் வரவேற்கிறோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai