Enable Javscript for better performance
திருப்பூரில் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையம்: மக்களவை உறுப்பினர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையம்: மக்களவை உறுப்பினர் தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையம் அமையவுள்ளதாக மக்களவை  உறுப்பினர் வி.சத்யபாமா தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது:
    திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க வேண்டும் என்று மத்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டது.  அதன் பலனாக திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
    இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எனக்கு அளித்த பதில் கடிதத்தில், திருப்பூரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைப்பதற்காக அஞ்சல் துறையுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்பு கொண்டு பணி செய்து வருகிறது.  
    திருப்பூரில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அஞ்சலகத்தில் இந்த சேவையை இணைப்பது குறித்து இரண்டு அமைச்சகங்களும் பரிசீலித்து வருகின்றன.  அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாதனங்களும் வாங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சாராத சாதனங்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளும் முழுமையடையும் நிலையில் உள்ளது. 
    எனவே,  திருப்பூரில் விரைவில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai