Enable Javscript for better performance
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து 13 இல் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து 13 இல் பொதுக்கூட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து  வரும் 13ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீர்மானித்துள்ளன. 
    திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. 
    திமுக மாநகரப் பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டணி கட்சிகள் சார்பில் கோபால்சாமி (காங்கிரஸ்), ரவி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), காமராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சிவபாலன் (மதிமுக), இப்ராகிம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஆறுமுகம் (திராவிடர் கழகம்), ஈஸ்வரன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இதில், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13-ஆம் தேதி திருப்பூர், வெள்ளியங்காட்டில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai