Enable Javscript for better performance
போலீஸ் தாக்கியதாக காவல் நிலையத்தில் கூச்சல்போட்ட இளைஞர்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் தாக்கியதாக காவல் நிலையத்தில் கூச்சல்போட்ட இளைஞர்

    By DIN  |   Published on : 09th February 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தன்னைக் காவலர் தாக்கியதாகக் கூறி, அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கூச்சல் போட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பூர், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கே.சிவகுமார் (23).  இவர், ஊத்துக்குளியில் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். இவர், வீட்டில் இருந்து பூண்டி சுற்றுச்சாலை வழியாக ஊத்துக்குளிக்கு  செல்வது வழக்கம்.
    இந்நிலையில், இவர் வியாழக்கிழமை காலை வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பூண்டி சுற்றுச்சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது,  பூலுவப்பட்டி நான்கு சாலை சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸார்,  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகுமாருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர். 
    அபராதத் தொகையை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட  அவரை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அனுப்பர்பாளையம் காவலர் மணிவாசகம் தடுத்து நிறுத்தியுள்ளார். சிவகுமாரிடம் அவரது பெயர், முகவரியைக் கேட்டு, அவர் வைத்திருந்த பையைத் திறந்து காட்டுமாறும் கூறியுள்ளார் காவலர். இதற்கு சிவகுமார் சரியாக பதில் கூறவில்லையாம். 
      இதனால் ஆத்திரமடைந்த காவலர்,  சிவகுமார் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு மணிவாசகம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், ஒரு தவறும் செய்யாத என்னை காவலர் கன்னத்தில் ஏன் அறைந்தார் எனக்கூறி,  சிவகுமார் கூச்சல் போட்டுள்ளார்.
    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த பிற போலீஸார் சிவகுமாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai