Enable Javscript for better performance
மாடிப் படிக்கட்டில் தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மாடிப் படிக்கட்டில் தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளி சாவு

    By DIN  |   Published on : 09th February 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி ரங்கா நகரில்  வீட்டு மாடிப் படிகட்டில் இருந்து தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
    திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கியிருந்த 45 வயது மதிக்கத்தக்க வட மாநிலத் தொழிலாளி அவிநாசி ரங்கா நகர் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
    இந்நிலையில்,  இவர் ரங்கா நகரில் புதன்கிழமை இரவு மாடிப் படிக்கட்டு ஏறும்போது தவறி விழுந்துள்ளார். அடுத்த நாள் காலையில் பார்த்தபோது அந்த இடத்தில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இத்தொழிலாளியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அவர் மது போதையில் கீழே விழுந்து இறந்துவிட்டாரா எனவும் போலீஸார் வழங்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai