Enable Javscript for better performance
"மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தை நல்லூரில் அமைக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தை நல்லூரில் அமைக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 09th February 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தை நல்லூரில் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
    திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனடிப்படையில், அரசுத் துறை அலுவலகங்கள் சொந்த கட்டடத்திலும், வாடகைக் கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் பதிவுத் துறைக்கு என சொந்தக் கட்டடம் இல்லை. தற்போது பதிவுத் துறைக்கு சொந்த இடம் பார்க்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்காக மாநகரில் இருந்து வெகு தொலைவில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் இடம் தேர்வுசெய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
    அங்கு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுக்கள் அவதியுறும் நிலை ஏற்படும். ஆகவே,  திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட காங்கயம் சாலை, சென்னிமலைபாளையம் பிரிவு அருகில் அரசுக்குச் சொந்தமான வஞ்சியம்மன் கோயில் எதிரில் 100 சென்ட் காலி இடம் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தைக் கொண்டு ஆய்வு செய்து, அந்த இடத்தில் பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai