Enable Javscript for better performance
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி

    By DIN  |   Published on : 09th February 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் நடைபெற்ற விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
    திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்து கொடுத்து வருகின்றனர்.
    ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையிலான கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதை அடுத்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
    அதன்படி, 2014-இல் குறிப்பிட்ட சதவீத கூலி உயர்வு முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட கூலி வழங்கப்படவில்லை. 2016-ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை மூலமாக கூலியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்தப்படியான கூலி 3 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பின்னர்
    முந்தைய கூலியே வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
    இந்நிலையில், கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்டத் தொழிலாளர் நல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் அமுதா தலைமை வகித்தார். ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படடவில்லை.  
    இதையடுத்து,  கோவையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவுள்ளதாக விசைத்தறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai