Enable Javscript for better performance
வெள்ளக்கோவிலில் 13-இல் 1008  சிவலிங்க பூஜை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலில் வரும் 13ஆம் தேதி 1008 சிவலிங்க பூஜை நடைபெற உள்ளதாக தர்ம ரக்ஷண ஸமிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
    ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும் இந்த சிவலிங்க பூஜையில் சிவராத்திரியின் மகிமை, சிவராத்திரி விரதம், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்ளும் வகையில் சத்சங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கூட்டாகச் செய்யும் பிரார்த்தனைக்கு பல மடங்கு மகிமை உண்டு. 
    எனவே, 1008 குடும்பங்கள் பங்குபெறும் சிவராத்திரி சிவலிங்க பூஜையில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.  
    இது குறித்த விவரங்களுக்கு தர்ம ரக்ஷண ஸமிதியை அணுகுமாறு அந்த அமைப்பின் நகரத் தலைவர் வி.சி.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai