Enable Javscript for better performance
வெள்ளக்கோவிலில் 35 மி.மீ. மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் பகுதிகளில் வியாழக்கிழமை 35 மி.மீ மழை பெய்துள்ளது.
    வெள்ளக்கோவிலில் மழைக்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. இதேபோல் வீரசோழபுரம், ரெட்டிவலசு, முத்தூர், வாய்க்கால்மேட்டுப்புதூர், புதுப்பை, தாசவநாய்க்கன்பட்டி உள்ளிட்ட  சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்தது. 
    வெள்ளக்கோவிலில் வீரக்குமார சுவாமி கோயில் திடலில் மழைநீர் தேங்கியதால் தேர் திருவிழாவுக்காகத் தாற்காலிகக் கடைகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நகரின்ஒருசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் 35 மி.மீ மழை பதிவாகியுள்ளது.  இந்த மழை விவசாயத்துக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai