Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வை முழுமையாக வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாநகராட்சி அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில்,  கடந்த 2017-ஆம் ஆண்டு வருடாந்திர ஊதிய உயர்விற்காக  தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை ஒப்பந்த முறையில் நிர்வகித்து வரும் நிர்வாகத்திடம் வழங்கிய பணத்தை முறையாக அந்த நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.
      இதுகுறித்து தமிழக அரசிடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது,  தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஆகியவற்றிற்கு பணம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
    எனவே, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நிர்வகித்து வரும் நிறுவனத்தின் மீது  நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள உயர்வு குறைவாக வழங்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு முறையாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai