Enable Javscript for better performance
ஊதியூர் அருகே விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊதியூர் அருகே விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதியூர் அருகே தனியாரால் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட பிரமிடு வடிவிலான கட்டடம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.
    ஊதியூரை அடுத்துள்ள நாட்டான்வலசு பகுதியில் தனியார் வீட்டுமனைப் பிரிவில் வீட்டு மனை வாங்கிய நபர், ஊராட்சி அனுமதி பெறாமல் பிரமிடு வடிவிலான பிரார்த்தனைக் கூடத்தைக் கட்டியதாகத் தெரிகிறது. அரசு விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட பிரார்த்தனைக் கூடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் அண்ணாதுரை ஊதியூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.
    இதையடுத்து, காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதி பெற்ற இடத்திலிருந்து சற்று தள்ளி வீடு கட்டியதும், வீட்டுக்கு அருகில் எந்த விதமான அனுமதியும் பெறாமல் பிரமிடு வடிவிலான கட்டம் கட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அந்தக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai