Enable Javscript for better performance
கழிவுநீர் வெளியேற்றம்: சலவைப்பட்டறையை முற்றுகையிட்ட பொது மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    கழிவுநீர் வெளியேற்றம்: சலவைப்பட்டறையை முற்றுகையிட்ட பொது மக்கள்

    By DIN  |   Published on : 24th March 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை முறைகேடாக வெளியேற்றிய தனியார் சலவைப்பட்டறையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    மங்கலம், அக்ரஹாரபுதூர் அருகே தனியார் சலவைப்பட்டறையில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
    மங்கலம், அக்ஹாரப்புதூர் அருகே வேட்டுவபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையத்துக்கு உள்பட்ட தனியார் சலவைப்பட்டறையில் சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த கழிவுநீர் அருகில் உள்ள தோட்டத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. மழைநீருடன் சலவைப்பட்டறை கழிவுநீரையும் திறந்து விட்டுள்ளனர்.
    இதுதொடர்பாக மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் அளித்தோம். அதன்பேரில் வந்து ஆய்வு செய்தவர்கள் முறைகேடாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, சலவைப்பட்டறையின் உரிமத்தை ரத்து செய்து அதை நிரந்தரமாக மூட வேண்டும். விவசாய நிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றனர்.
    மங்கலம் போலீஸôர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai