Enable Javscript for better performance
சாலைத் தடுப்பு மீது லாரி மோதி விபத்து- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம்}ஈரோடு சாலையில் அரசு கலைக் கல்லூரி அருகே சாலையில் மையத் தடுப்பு அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
    காங்கயம்}ஈரோடு செல்லும் சாலையில் முள்ளிப்புரம் அருகே அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் அருகே அபாயகரமான சாலை வளைவு உள்ளது. இந்த வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை அப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து தினமணி நாளிதழிலும் செய்தி வெளியானது.
    இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை மூலமாக அப்பகுதியில் கல்லூரி முன்பு தற்போது வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சாலையில் மையத் தடுப்பு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
    இப்பணி இன்னும் முழுதாக நிறைவுபெறாத நிலையில், தேனியில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சாலைத் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
    லாரி ஓட்டுநர் கென்னடி காயமின்றி உயிர் தப்பினார். லாரியை அப்புறப்படுத்தி பின்னர் சாலைத் தடுப்பு அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai