Enable Javscript for better performance
சாலையோரம் மண் திருட்டு: பொக்லைன் இயந்திரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் அருகே குங்குமம்பாளையத்தில் சாலையோரத்தில் இருந்த மண்ணைத் திருடி தனியார் நிலத்தின் சுற்றுவேலியைப் பலப்படுத்தி உள்ளனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தை வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குங்குமம்பாளையத்தில் திருப்பூர் தொழிலதிபர் கிருஷ்ணகுமாருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு சுற்றுவேலி அமைக்கப்பட்டு அதனைப் பலப்படுத்தும் வகையில் சாலையோரத்தில் இருந்த மண்ணை பொக்லைன் இயந்திரத்தின் மூலமாகப் பறித்தெடுத்து சுற்றுவேலி நெடுங்கிலும் மண் கொட்டப்படும் பணி நடைபெற்று வந்தது. இது பற்றி பல்லடம் வருவாய் துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் செய்துள்ளனர்.
    பல்லடம் வட்டாட்சியர் அருணா உத்தரவின்பேரில் பல்லடம் வருவாய் ஆய்வாளர் சித்தைய்யா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சாலையோர மண்ணை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட, கணபதிபாளையத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவருக்குச் சொந்தமான பொக்லைன்
    இயந்திரத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai