Enable Javscript for better performance
சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அமராவதி முதலைப் பண்ணை- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அமராவதி முதலைப் பண்ணை

    By DIN  |   Published on : 24th March 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடுமலை அருகே அமராவதி அணைப் பகுதியில் அமைந்துள்ள முதலைப் பண்ணை தமிழக அளவில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.
    உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான அமராவதி அணைப் பகுதி. இங்கு மிகவும் பிரபலமான மீன் பண்ணை, அமராவதி அணை, அணையின் முன்பு அமைந்துள்ள அழகிய பூங்கா, சிறுவர் பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
    இங்குள்ள முதலைப் பண்ணை 1976}ஆம் ஆண்டு 22 குஞ்சுகளுடன் துவங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் சென்னை, ஏற்காடு, அமராவதி அணைப் பகுதி ஆகியவற்றில் முதலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அமராவதி அணைப் பகுதியில் உள்ள முதலைப் பண்ணையில் கருஞ்சாம்பல், மஞ்சள் கலந்த மர நிறம் என பல்வேறு வண்ணங்களில் 3 மாத முதலைகள் முதல் 30 வயது முதலைகள் வரை பராமரிக்கப்படுகின்றன.
    100 ஆண்டுகள் வரை வாழும் இந்த முதலைகளில் பெண் முதலைகள் சுமார் 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் தன்மை உடையவை. பெண் முதலைகள் இங்கு அதிக அளவில் இருந்ததால், கடந்த பல வருடங்களில் அதிக அளவில் இனப் பெருக்கம் நடந்து வந்தது.
    இதனால் நாளடைவில் முதலைகளின் எண்ணிக்கை அதீதமாகப் பெருகியதால், வனத் துறையினரால் முதலைப் பண்ணையை முறையாகப் பராமரிக்க முடியாமல் போனது. மேலும் முதலைகளுக்கு உணவு வழங்க அதிக அளவில் நிதியும் தேவைப்பட்டது.
    எனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி அருகிலுள்ள டாப்ஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள சின்னாற்றில் 400}க்கும் மேற்பட்ட முதலைகள் கொண்டுசென்று விடப்பட்டன. தற்போது அமராவதி பண்ணையில் 98 முதலைகள் (பெண்} 72, ஆண்} 26) பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    கோடை விடுமுறையில் அதிக அளவில் சுற்றுலாப் பய ணிகள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் முதலைப் பண்ணையை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai