Enable Javscript for better performance
திருப்பூர் மாநகர வாழ்வாதார புள்ளிவிவரங்கள் சேகரிப்புக் கூட்டம்: மாநகராட்சியில் நடைபெற்றது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாநகர வாழ்வாதார புள்ளிவிவரங்கள் சேகரிப்புக் கூட்டம்: மாநகராட்சியில் நடைபெற்றது

    By DIN  |   Published on : 24th March 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகரங்களின் வாழ்வாதாரத் தரம் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிப்புக் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 116 நகரங்களும், 500 நகரங்களில அம்ருத் திட்டமும் மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் செயல்பாட்டில் உள்ளது.
    இத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள நகரங்களில் வாழத் தகுந்த தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி வளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.
    அதன்படி, நகரங்களின் வாழ்வாதாரத் தகுதிகளில் முக்கியமான அம்சங்களாகக் கருதப்படும் நிறுவனம், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் தரம் குறித்து 15 பிரிவுகளாகப் பிரித்து 70 புள்ளிவிவரங்கள் சேகரிக்க படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 துறைகளிடமிருந்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
    அதன்படி, திருப்பூர் மாநகரம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் தலைமையில், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, மின்வாரியம், கல்வித் துறை, பொது சுகாதாரத் துறை, வணிக வரித் துறை, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை, காவல் துறை, போக்குவரத்துத்
    துறை, வேலைவாய்ப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    புள்ளிவிவரங்களைத் தயார் செய்வது குறித்து காணொலித் திரை மூலம் விளக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறைக்கான புள்ளிவிவரங்கள் குறித்த விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். புள்ளிவிவரங்களை வரும் 27}ஆம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai