Enable Javscript for better performance
நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 24th March 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியரக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் பங்கேற்றுப் பேசினர். அதன் விவரம்:
    எஸ்.ஆர். மதுசூதனன் (தமிழக விவசாயிகள் சங்கம்): கடந்த 10 ஆண்டுகளாக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைப் பகுதிகளில் தண்ணீர்த் திருட்டு மிகச் சாதாரணமாக நடக்கிறது. விவசாயிகளுக்குத் தற்போது
    குறைந்த அளவு தண்ணீர்தான் கிடைக்கிறது. அதையும் பல்வேறு இடங்களில் வசதி படைத்தவர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர் உதவியோடு முறைகேடாக எடுக்கின்றனர்.
    திருமூர்த்தி அணை மற்றும் ஏழுகுளத்தில் தேக்கப்படும் தண்ணீர் பாதை வரி பெறப்பட்ட குழாய் மூலமும், அனுமதி பெறாமலேயே போடப்பட்டுள்ள குழாய் மூலமாகவும் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இத்தண்ணீர் ஆண்டு முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முறைகேடாகக் கொண்டு செல்லும் தண்ணீர் விற்பனையும் செய்யப்படுகிறது. ஒருவர் பெற்ற பாதை வரி உரிமையை இன்னொருவருக்கு சட்ட விரோதமாக பத்திரப் பதிவும் செய்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    ஈஸ்வரமூர்த்தி (கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்): நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக கிலோவுக்கு 20 பைசா வீதம் விவசாயிகளிடம் வசூலிக்கிறார்கள். தாராபுரத்தை சுற்றியுள்ள சில கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு 90 பைசா வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    காளிமுத்து (தாராபுரம்): கிராம நிர்வாக அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர் யாரும் இருப்பதில்லை. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பரவலாக புகார் எழுந்துள்ளது. எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களின் செல்லிடப்பேசி எண்களை எழுதி வைத்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    கோபால் (பொங்கலூர்): பொங்கலூர், குண்டடம், காங்கயம் மற்றும் உடுமலை பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சிறிய வெங்காயம் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். நீர் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் முறையாகக் கையாள வேண்டும். அனைவருக்கும் சமமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்எடுக்க வேண்டும் என்றார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.வி.எஸ்.குமார், திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார்,
    வேளாண்மைத் துறை இணை இயக்குநர் முகம்மது இக்பால் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai