Enable Javscript for better performance
பின்னலாடை நிறுவனத்தில் ஆள்குறைப்பு: 27}இல் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை- Dinamani

சுடச்சுட

    

    பின்னலாடை நிறுவனத்தில் ஆள்குறைப்பு: 27}இல் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

    By DIN  |   Published on : 24th March 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பின்னலாடை நிறுவனத்தில் திடீரென ஆள்குறைப்பு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தர வேண்டும் அல்லது வேலையிழப்புக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ பனியன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300 தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக
    இந்நிர்வாகம் படிப்படியாகத் தொழிலாளர்களை வேலையைவிட்டு நிறுத்திவந்ததாகத் தெரிகிறது. 130 தொழிலாளர்களை திடீரென வேலையைவிட்டு நிறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த இரு தினங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    இந்நிலையில், மாவட்டத் தொழிலாளர் அலுவலர் பிரேமா தலைமையில் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியூ பனியன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், பின்னலாடை உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் திருப்பூரில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்களில் 40 பேரை மட்டும் மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாகவும், மற்ற தொழிலாளர்களுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு வேலை தருவதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ஆனால், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். அப்படி வேலை தராவிட்டால் சட்டப்படி வேலை இழப்புக்கான சம்பளத்தை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
    அதையடுத்து, நிர்வாகத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அடுத்தகட்டப் பேச்சு வார்த்தை வரும் 27}ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை முடியும் வரை நிர்வாகம் பிற தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கக் கூடாது என்றும் அதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai