Enable Javscript for better performance
மூலனூரில் சாலை விபத்தில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தார்.
    வெள்ளக்கோவில் அருகே நாகமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிராஜ் மனைவி பூங்கொடி (48). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மூலனூர் பொன்னிவாடியிலுள்ள தனது உறவினர் வீட்டுத் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். வழியில் சின்னக்காம்பட்டி பிரிவு அருகே இந்த இருசக்கர வாகனம் மீது அவ்வழியாக வந்து கொண்டிருந்த கார் மோதியது. இதில், பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இது குறித்து மூலனூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai