Enable Javscript for better performance
அவிநாசியில்அனுமதியின்றி மது விற்பனை: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அவிநாசி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவிநாசி காவல் நிலைய ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்ள் கணேசன், தயாளன், ஸ்டீபன் மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் இரவு ரோந்து மேற்கொண்டனர்.
    அப்போது, புதிய பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் முள்ளுக்காட்டு  பகுதியில் இருந்த அவிநாசிலிங்கம்பாளையம், பெரியார்நகர் பிரகாஷ் (29) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து 180 மிலி அளவுள்ள 30 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இதேபோல சிவகங்கை மாவட்டம், சாத்தனூரைச் சேர்ந்த அசோக் மகன் மலைச்செல்வன் (33) என்பவரிடம் இருந்து 
    20 மதுபாட்டில்களையும், கருவலூர் பெட்ரோல் பங்க் அருகே மது விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ரஞ்சித்குமார்(32) என்பவரிடமிருந்து  17 மது பாட்டில்களையும், காசிகவுண்டன்புதூர், முள்ளுக்காட்டில்  மது விற்பனை செய்ததாக திருவாடனை, அரும்பூரைச் சேர்ந்த பிரபு(32) என்பவரிடமிருந்து 4 மது பாட்டில்கள் உள்ளிட்ட மொத்தம் 71 மது பாட்டில்களை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.  இவர்கள் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai