Enable Javscript for better performance
அவிநாசி கிளைச் சிறையில் கூடுதல் காவல் துறைத் தலைவர்  ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி கிளைச் சிறையில் கூடுதல் காவல் துறைத் தலைவர்  ஆய்வு

    By DIN  |   Published on : 31st March 2018 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி கிளைச் சிறையில் கூடுதல் காவல்துறை தலைவர் மற்றும் தமிழ்நாடு சிறைத் துறைத் தலைவர் அசுதோஷ் சுக்லா வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
     இந்த ஆய்வின் போது கிளைச் சிறையில் உள்ளவர்களின் நலன் குறித்தும்,  சிறையின் அடிப்படை வசதிகள் குறித்தும் விசாரித்தார். பின்னர்,  அங்குள்ள ஆவணங்களைச் சரிபார்த்தார்.  மேலும், அலுவலர்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
    ஆய்வின்போது, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் உடன் இருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai