Enable Javscript for better performance
காங்கயம் அருகே காதலர்கள் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம் அருகே காதலர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
    காங்கயம் அருகே உள்ள சத்திரவலசு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்திராஜ் மகள் சிலம்பரசி (19).  திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வழக்கம்போல சிலம்பரசி வீட்டின் அறைக்குள் தூங்கினாராம். இவரது பெற்றோர் வீட்டின் வராண்டாவில் தூங்கினர். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில்  சிலம்பரசியின் தாய் பூங்கொடி  கதவைத் திறந்து அறைக்குள் சென்றபோது  சிலம்பரசி சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிலம்பரசியின் உடலை கீழே இறக்கி, காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    இளைஞர் சாவு: இந்நிலையில், சிலம்பரசியின் பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் கலையரசன் (25) என்பவரும் காலை 7 மணிக்கு வீட்டில் சேலையால்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவர் காங்கயத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாராம்.
    தகவல் அறிந்த காங்கயம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 
    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
     விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட கலையரசனும், சிலம்பரசியும்  உறவினர்கள் என்பது தெரியவந்தது.
     இருவரும் நீண்ட காலமாக பழகி வந்தனராம். இதை இருவரின் பெற்றோரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai